top of page
7dc6ef98-deb6-4378-a897-86694be7715a.png

Cleaning Products Business ஆரம்பிக்க அடிப்படை பயிற்சி-

Online Video Course &
PDF Study Materials

கிளீனிங் ப்ராடக்ட்ஸ் தொழில் தொடங்குபவர்களுக்கான

ஆரம்பநிலை அடிப்படைப் பயிற்சி

Cleaning Products Beginner Foundation Course

கிளீனிங் ப்ராடக்ட்ஸ் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? ஆனால் எங்கே தொடங்குவது, என்ன கற்றுக்கொள்வது, எந்தத் தவறுகளைத் தவிர்ப்பது என்று தெரியவில்லையா?

இந்த course, ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு தேவையான:

  • அடிப்படைத் தொழில்நுட்ப அறிவு

  • உற்பத்திப் பாதுகாப்பு அறிவு

  • தொழில் நடத்தும் அடிப்படை அறிவு

  • செலவு, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் புரிதல்

ஆகியவற்றை எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறது.

முக்கிய குறிப்பு:

இது ready-made formula வழங்கும் course அல்ல.
கிளீனிங் ப்ராடக்ட்ஸ் தொழிலை சரியான புரிதலுடன் தொடங்க உதவும் அடிப்படைப் பயிற்சி.

இந்த Course யாருக்கானது?

இந்த course கீழே உள்ளவர்களுக்கு ஏற்றது:

  1. கிளீனிங் ப்ராடக்ட்ஸ் தொழில் தொடங்க நினைப்பவர்கள்

  2. தொழில்நுட்பப் பின்னணி இல்லாத புதியவர்கள்

  3. குறைந்த கல்வித் தகுதி இருந்தாலும் தொழில் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்

  4. வீட்டிலிருந்து சிறிய அளவில் தயாரிக்க விரும்புபவர்கள்

  5. 50 முதல் 200 லிட்டர் அளவில் தயாரிக்கத் திட்டமிடுபவர்கள்

  6. ஏற்கனவே தொடங்கியிருந்தும் சரியான வழிமுறை தெரியாதவர்கள்

  7. Formula, உற்பத்தி, செலவு மற்றும் விற்பனை பற்றிய அடிப்படை அறிவு தேவைப்படுபவர்கள்

  8. நேரடி செய்முறைப் பயிற்சிக்கு முன் அடிப்படை அறிவைப் பெற விரும்புபவர்கள்

யாருக்கு இந்த Course பொருந்தாது?

இந்த course கீழே உள்ளவர்களுக்காக உருவாக்கப்படவில்லை:

  1. பெரிய அளவில் தொழிற்சாலை நடத்தும் அனுபவமுள்ளவர்கள்

  2. மேம்பட்ட formula உருவாக்கம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்

  3. Ready-made commercial formula மட்டும் தேடுபவர்கள்

  4. தனிப்பட்ட product development எதிர்பார்ப்பவர்கள்

  5. தங்களுடைய formula-வை திருத்தித் தர வேண்டும் என்று நினைப்பவர்கள்

  6. Course பார்த்தவுடன் உடனடியாக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள்

இந்த Course-ல் என்ன கற்றுக்கொடுக்கப்படும்?

இந்த course மொத்தம் 14 பாடங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

1. கிளீனிங் ப்ராடக்ட்ஸ் தொழில் அறிமுகம்

(Introduction)

இந்தத் தொழிலின் வாய்ப்புகள், சவால்கள் மற்றும் தேவையான அடிப்படைப் புரிதல்.

2. பி.எச். அடிப்படை அறிவு

(pH Basics — அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை)

pH என்றால் என்ன, அது product quality மற்றும் safety-க்கு ஏன் முக்கியம்?

3. கரைசல் மற்றும் செறிவு

(Solutions and Concentration)

கரைசல், கலப்பு விகிதம், நீர்த்துப்போகச் செய்தல் மற்றும் செறிவு பற்றிய அடிப்படை அறிவு.

4. லை மற்றும் காரத்தன்மை

(Lye and Alkalinity)

Lye மற்றும் கார மூலப்பொருட்களின் பயன்பாடு, அபாயம் மற்றும் பாதுகாப்பான கையாளுதல்.

5. பாதுகாப்பு அடிப்படைகள்

(Safety Fundamentals)

மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் உற்பத்தி இடத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள்.

6. மூலப்பொருட்களின் வகைகள் மற்றும் Formula அமைப்பு

(Ingredient Categories and Formulation Structure)

அழுக்கு நீக்கும் பொருட்கள், கெட்டித்தன்மை கொடுக்கும் பொருட்கள், வாசனை, நிறம் மற்றும் பாதுகாப்புப் பொருட்களின் பங்கு.

7. நல்ல உற்பத்தி நடைமுறைகள்

(GMP — Good Manufacturing Practices)

சுத்தம், ஒழுங்கு, உற்பத்திப் பதிவு மற்றும் ஒரே தரத்தில் product தயாரிக்கும் முறைகள்.

8. தொழில் செய்யும் முறைகள்

(Business Models — வணிக முறைகள்)

சொந்த brand, வீட்டிலிருந்து தயாரித்தல், wholesale, retail மற்றும் third-party manufacturing பற்றிய அறிமுகம்.

9. பணம் மற்றும் செலவு கணக்கீடு

(Finance Basics — நிதி அடிப்படைகள்)

தயாரிப்பு செலவு, விற்பனை விலை, லாபம், முதலீடு மற்றும் பணக் கட்டுப்பாடு பற்றிய அடிப்படை அறிவு.

10. மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை

(Marketing and Sales)

வாடிக்கையாளர்களை அடைவது, product-ஐ அறிமுகப்படுத்துவது மற்றும் digital marketing பற்றிய அடிப்படைகள்.

11. அரசு விதிமுறைகள்

(Government Rules and Basic Compliance)

தொழில் பதிவு, product label, batch number, எச்சரிக்கை தகவல் மற்றும் சட்ட விழிப்புணர்வு.

12. உற்பத்தி மற்றும் வணிக நெறிமுறைகள்

(Ethics in Manufacturing and Business)

தரம், நேர்மை, பாதுகாப்பு, நியாயமான விலை மற்றும் வாடிக்கையாளர் பொறுப்பு.

13. கிளீனிங் ப்ராடக்ட்ஸ் பிகினர்ஸ் கோர்ஸ் – சரியான மனப்பாங்கு, வளர்ச்சி பாதை & நீண்டகால வெற்றி அமைப்பு

(Practical Startup Roadmap — நடைமுறை தொடக்க வழிகாட்டி)

Product தேர்வு, சிறிய trial, முதலீடு, market test மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்.

14. இணைப்புகள் மற்றும் தொடக்க வழிகாட்டுதல்கள்

(Annexure and Startup Guidance)

தொழில் தொடங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய முக்கிய குறிப்புகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்.

இந்த Course மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

  • 14 முன்பதிவு செய்யப்பட்ட Video Lessons

  • ஒவ்வொரு பாடத்திற்கும் PDF Notes

  • எளிய தமிழில் விளக்கம்

  • கடினமான English technical terms-க்கு தமிழ் விளக்கம்

  • Technical, production மற்றும் business அடிப்படை அறிவு

  • ஆரம்பநிலைத் தவறுகளைக் குறைக்க உதவும் வழிகாட்டுதல்

  • அடுத்த கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு

ஒருமுறை நடைபெறும் கேள்வி–பதில் நிகழ்ச்சி

Course பாடங்களை முடித்த பிறகு, practical training class நடைபெறுவதற்கு முன், முன்கூட்டியே அறிவிக்கப்படும் தேதி மற்றும் நேரத்தில்:

ஒருமுறை மட்டும் Online கேள்வி–பதில் நிகழ்ச்சி

(One-Time Pre-Scheduled Q&A Session)

நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில்:

  • Course பாடங்கள் தொடர்பான பொதுவான சந்தேகங்களை கேட்கலாம்

  • புரியாத அடிப்படைக் கருத்துகளுக்கு விளக்கம் பெறலாம்

  • Practical training class-க்கு முன் தேவையான பொதுவான தயாரிப்புகளைப் புரிந்துகொள்ளலாம்

இந்த Q&A session ஒருமுறை மட்டுமே நடைபெறும். தனிப்பட்ட நேரத்திற்கு ஏற்ப தனியாக மாற்றி நடத்தப்படாது.

Q&A Session-ல் வழங்கப்படாதவை

இந்த கேள்வி–பதில் நிகழ்ச்சி:

  • தனிப்பட்ட formula development service அல்ல

  • Formula correction session அல்ல

  • Product troubleshooting service அல்ல

  • One-to-one consultation அல்ல

  • முழுமையான practical training அல்ல

  • தனிப்பட்ட business planning service அல்ல

அனைவருக்கும் பொதுவாகப் பயன்படும் course-related கேள்விகளுக்கு மட்டுமே விளக்கம் வழங்கப்படும்.

முக்கிய விளக்கம்: Practical Training

Practical training class இந்த ₹1000 beginner course கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை.

Practical training தேவைப்படுபவர்கள்:

  • Beginner course-ஐ முடித்திருக்க வேண்டும்

  • தனியாகப் பதிவு செய்ய வேண்டும்

  • Practical training-க்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்

  • அறிவிக்கப்படும் தேதி மற்றும் இடத்தில் கலந்துகொள்ள வேண்டும்

Practical training கிடைப்பது நேரம், batch availability மற்றும் தகுதியின் அடிப்படையில் இருக்கும்.

இந்த Course-ல் சேர்க்கப்படாதவை

  • இந்த course கட்டணத்தில் கீழே உள்ளவை சேர்க்கப்படவில்லை:

  • Ready-made commercial formulas

  • நேரடி lab practical training

  • Offline classroom training

  • தனிப்பட்ட  Formula correction

  • Product testing

  • Quality certification

  • Raw-material supplier contact details

  • Machinery selection

  • Factory setup service

  • தொடர்ச்சியான WhatsApp support

  • தினசரி phone support

  • One-to-one technical consultation

  • விற்பனை அல்லது வருமான உத்தரவாதம்

  • இத்தகைய சேவைகள் தேவைப்பட்டால், அவை தனியான paid services ஆக வழங்கப்படும்.

இந்த Course முடித்த பிறகு என்ன புரிந்துகொள்வீர்கள்?

Course-ஐ முழுமையாகப் படித்த பிறகு:

  • கிளீனிங் ப்ராடக்ட்ஸ் தொழில் உங்களுக்கு ஏற்றதா என்பதை மதிப்பிட முடியும்

  • Formula தெரிந்தால் மட்டும் business வெற்றி பெறாது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்

  • மூலப்பொருட்களின் முக்கியப் பணிகளைப் பற்றிய அடிப்படை அறிவு கிடைக்கும்

  • பாதுகாப்பான உற்பத்தியின் முக்கியத்துவம் புரியும்

  • செலவு மற்றும் விற்பனை விலையைத் திட்டமிடும் அடிப்படை அறிவு கிடைக்கும்

  • உங்களுக்கு ஏற்ற business model-ஐ தேர்வு செய்ய முடியும்

  • தேவையற்ற trial-and-error முயற்சிகளைக் குறைக்க முடியும்

  • Practical training அல்லது அடுத்தகட்ட learning தேவையைத் தீர்மானிக்க முடியும்

இந்த Course படித்தவுடன் பணம் சம்பாதிக்க முடியுமா?

உடனடியாக வருமானம் கிடைக்கும் என்று உறுதி அளிக்க முடியாது.

இந்த course உங்களுக்கு:

  • அடிப்படை அறிவு

  • தெளிவான புரிதல்

  • சரியான திசை

  • தொடக்க வழிகாட்டுதல்

ஆகியவற்றை வழங்கும்.

உங்கள் தொழில் வெற்றி கீழே உள்ளவற்றைப் பொறுத்தது:

  • கற்றதை எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள்

  • Product quality

  • சரியான விலை நிர்ணயம்

  • செலவுக் கட்டுப்பாடு

  • Market understanding

  • Marketing மற்றும் sales முயற்சி

  • வாடிக்கையாளர் சேவை

  • பொறுமை மற்றும் தொடர்ச்சியான உழைப்பு

அறிவு மட்டும் போதாது.
கற்ற அறிவை சரியாகச் செயல்படுத்தும்போதுதான் வருமானம் உருவாகும்.

Formula தெரிந்தால் மட்டும் Business வெற்றி பெறுமா?

இல்லை.

  • Formula மூலம் product தயாரிக்கலாம்.

  • ஆனால் நிலையான மற்றும் லாபகரமான business உருவாக்க:

  • ஒரே தரத்தில் product தயாரித்தல்

  • பாதுகாப்பான உற்பத்தி முறை

  • செலவுக் கட்டுப்பாடு

  • சரியான விலை நிர்ணயம்

  • Market பற்றிய புரிதல்

  • தொடர்ச்சியான விற்பனை

  • வாடிக்கையாளர் நம்பிக்கை

  • பணத்தை முறையாக நிர்வகித்தல்

  • ஆகியவை அவசியம்.

  • இந்த course இந்த அடிப்படைகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறது.

Course எப்படி நடைபெறும்?

  • இது:

  • 100% Online Pre-recorded Video Course

  • நீங்கள்:

  • வீட்டிலிருந்தே பார்க்கலாம்

  • உங்கள் நேரத்திற்கு ஏற்ப கற்றுக்கொள்ளலாம்

  • Video lessons-ஐ மீண்டும் பார்க்கலாம்

  • PDF Notes-ஐ மீண்டும் படிக்கலாம்

  • இது offline classroom training அல்ல.

Course Access எப்படி கிடைக்கும்?

  • Payment confirmation செய்யப்பட்ட பிறகு course access வழங்கப்படும்

  • Video lessons மற்றும் PDF Notes online முறையில் கிடைக்கும்

  • Access கிடைத்த பிறகு உங்கள் நேரத்திற்கு ஏற்ப படிக்கலாம்

  • Course access-ஐ மற்றவர்களுடன் பகிரக் கூடாது

  • Video அல்லது PDF materials-ஐ copy செய்து விற்பனை செய்யக் கூடாது

  • Course materials தனிப்பட்ட கற்றலுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன

Course முடித்த பிறகு கிடைக்கக்கூடிய Paid Services

  • தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் கீழே உள்ள சேவைகளுக்கு தனியாக விண்ணப்பிக்கலாம்:

  • நேரடி செய்முறைப் பயிற்சி
    (Practical Training)

  • தனிப்பட்ட தொழில்நுட்ப ஆலோசனை
    (One-to-One Technical Consultation)

  • Formula Review

  • Formula Correction

  • Product Development Support

  • Manufacturing Guidance

  • இந்த சேவைகள் beginner course கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை.

Refund விதிமுறை

  • இது ஒரு digital course.

  • Course access வழங்கப்பட்ட பிறகு:

  • Cancellation ஏற்கப்படாது

  • Refund வழங்கப்படாது

  • Course fee திருப்பித் தரப்படாது

  • Course fee மற்றொரு service-க்கு மாற்றப்படாது

  • Payment செய்வதற்கு முன் course details, deliverables, limitations மற்றும் refund விதிமுறைகளை முழுமையாகப் படிக்கவும்.

Course கட்டணம்

₹1000

நீங்கள் பெறுவது:

  • 14 Video Lessons

  • 14 PDF Notes

  • எளிய தமிழ் விளக்கம்

  • Technical மற்றும் business அடிப்படை அறிவு

  • ஒருமுறை நடைபெறும் pre-scheduled Online Q&A Session

சரியான அடிப்படையுடன் தொழிலைத் தொடங்க தயாரா?

👉 இப்போது Course Access பெறுங்கள்

குறிப்பு:

இந்த course அறிவு, தெளிவு மற்றும் வழிகாட்டுதல் வழங்குகிறது.
Business வெற்றி, விற்பனை அல்லது வருமானத்திற்கு உத்தரவாதம் வழங்காது.

bottom of page